ஆதவ்: அம்மா அப்பா குட்டி வயசுல எப்டி இருந்தாரு ??
அம்மா : உனக்கு அப்பாவோட குட்டி வயசு photo காட்டவா ?
ஆதவ் : சரி ok ..
( அப்பா மனசாட்சி : மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இப்டி தான் english தமிழும் சேர்த்து சொல்லுவான் )
அம்மா : இத பாரு ஆதவ், இது தான் உங்க அப்பா சின்ன வயசு school போட்டோ .. அப்பா எங்க கண்டுபுடி பார்க்கலாம் ?
ஆதவ் : அம்மா இந்த போட்டோ ல நெறைய girls இருக்காங்க .. அப்பாக்கு நெறைய girl friends இருக்காங்களா ??
(அப்பா மனசாட்சி : உன்ன என்ன கேட்டா அவ ... உனக்கு என் இப்டி எல்லாம் doubt வருது )
அம்மா : ஆமாண்டா .. உங்க அப்பா அப்பவே ஒரு bad boy ஆதவ் .. எவ்ளோ girl friends பாரேன் .
( அப்பா மனசாட்சி : அட பாவிகளா ... காலேஜ் வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனது கிடையாது .. :( :( .. எனக்கு இப்டி ஒரு build up aaa )
ஆதவ் : (அழுதுகிட்டே .... ) அம்மா அப்பாவ திட்டாத அம்மா ..
(அப்பா மனசாட்சி : வாடா என் சிங்க குட்டி எனக்கு support பன்ன நீ ஒரு ஆளாவது இருக்கியே .. )
அம்மா: அதுக்கு ஏன்டா அழுற .. உங்க அப்பாவ தான bad boy னு சொன்னேன் ..
(அப்பா மனசாட்சி : விடவே மாட்டியா ..)
ஆதவ் : அம்மா எனக்கு கூட school ல நெறைய girl friends இருக்காங்க , அப்ப நானும் bad boy தான? அலால (அதனால ) நீ அப்பாவ bad boy சொல்லாத அம்மா ...
அம்மா, அப்பா மனசாட்சி, பாட்டி, தாத்தா, வீட்டு பல்லி , etc .. etc .. : ???!!!!!!!!!!!???!!!!?!?!?!?!?!?!