அப்பா : நான் phoenix mall வரைக்கும் போயிட்டு வரேன் ..
அம்மா : எதுக்குங்க shopping போறீங்களா? நானும் வரேன் ...
அப்பா : Hey நான் shopping போற அளவுக்கு phoenix mall இன்னும் develop ஆகல .. சும்மா friend வந்திருக்கான் meet பண்ண போறேன் ..
எங்கேயோ விளையாடிட்டு இருந்த ஆதவ் நான் கிளம்புறத பார்த்து ஓடி வந்துட்டான்
ஆதவ் : அப்பா phoenix mall போறீங்களா ? நானும் வரேன் பா உங்க கூட ...
அவன் last time அங்க போனப்போ ஒரு toy கார்க்காக எப்படி தரைல உருண்டு பொறண்டு அழுதான்னு ஒரு 2 mins flashback கண்ணு முன்னாடி ஒடிச்சு ...
அப்பா: டேய் சாமி , நீ வேணாம் டா .. நீ அங்க வந்து ஓவரா அடம் பண்ணுவ .. நம்மால முடியாது .. நீ இங்கயே srinidhi கூட விளையாடு ...
ஆதவ் : அப்பா , நான் அடம் பண்ணவே மாட்டேன்பா , good boy ஆ இருப்பேன் .. please கூட்டிட்டு போங்கப்பா ...
அப்பா : பயபுள ரொம்ப feel பன்ட .. வா போகலாம் .. good boy ஆ இருக்கணும் ஆதவ் .. அங்க வந்து மொக்க போட்ட கடுப்பாகிடுவேன் ..
அம்மா : என்னங்க இவனையா கூட்டிட்டு போறீங்க .. last time . அங்க இருந்து அவன கூட்டிட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும் ல ..
அப்பா : Hey .. குழந்தை திருந்திட்டான் டி ..
அம்மா : யார் சொன்னா ?
அப்பா : அவனே சொன்னான் .. ( Refer to this dialogue "தேவாவே சொன்னான் " from thalapathi movie)
Come On டா ஆதவ் .. ஓடி வா .. Lets Go ......
ஆதவ் குடு குடுனு ஓடி வந்து front சீட் ல உட்காந்துகிட்டான் .. tring tring னு .. bell அடிச்சிட்டே...
பைக் ல எதுடா bell னு யோசிக்காதீங்க.. அது Cycle .. ஆதவ்க்கு cycle தான் ரொம்ப புடிக்கும்
(அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது .. phoenix mall ல bike parking .. 100rs .. cycle க்கு free அதான் )
Night pant , ஒரு பழைய t-shirt போட்டுட்டு , cycle ல phoenix mall போறதே ஒரு ஜாலியா இருக்கும் .. ஏன்னா மக்கள் அங்க கும்பல் கும்பலா ஏதோ marriage function போற மாதிரி ஓவர் build up ஆ வருவாங்க . அதுல 90% வேடிக்கை தான் பாக்க போறாங்க.. நாமளும் வேடிக்கை தான் பாக்க போறோம், plus நாம எவ்ளோ சூப்பரா dress பண்ணாலும் எவனும்/எவளும் நம்மள மதிக்க போறது இல்ல .. எதுக்கு too much effort ..
(இப்ப எதுக்கு இந்த சமுதாய கருத்து சொல்றேன்னு கேட்கறீங்களா .. இருக்கு .. பின்னாடி வெச்சிருக்கோம் twist :) )
Phoenix mall போயிட்டு, அங்க life style ல வேடிக்கை பார்த்துட்டு இருந்த friends a .. meet பண்ணி பேசிட்டு இருந்தேன்... அதுக்குள்ள ஆதவ் ground floor ல இருந்த LEGO toys கடைய பார்த்துட்டான்..
ஆதவ் : அப்பா நாம கீழ போய் .. அந்த கடைய பார்த்துட்டு போவோம் ப்பா ...
(Same place , Same shop .... அந்த flashback நடந்த இடம் இது தான் ... )
அப்பா : டேய் தம்பி, உன் கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் நான் ..
சரி இவன் கிட்ட இருந்து escape ஆகுறது கஷ்டம் .. lifestyle ல போய் , உள்ள இருந்து second floor போய் escape ஆகிடுவோம் .
அப்பா : ஆதவ் .. அப்பாவோட இன்னொரு friend , உள்ள இருக்கான் வா பார்த்துட்டு வந்துடலாம் ...
சொல்லிட்டே, வேகமா அவன உள்ள கூட்டிட்டு போயிட்டேன் .. அவனுக்கு யோசிக்க எப்பவுமே time கொடுக்க கூடாது
LifeStyle உள்ள போய் , second floor exit கிட்ட போய்ட்டோம் .. அந்த நேரம் பார்த்து எதையோ பார்த்துட்டான் shop ல ..
ஆதவ் : அப்பா அப்பா ... Lightning McQueen Car அப்பா .. ( Cars னு ஒரு animation movie வந்துச்சு , அதுல இதான் hero )
அங்க ஒரு kids செருப்பு , அதுல அந்த கார் sticker இருந்துச்சு .. சின்னதா .. அது எப்டி அவன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு தெரியல ..
அப்பா : ஆதவ் , நான் உன் கிட்ட என்ன சொன்னேன் .. இப்ப அப்பா கிட்ட காசு வேற இல்ல டா ...
உண்மைலேயே நான் காசு எடுத்துட்டு வரல .. இந்த mall க்கு போனா , எப்படியாச்சும் செலவு பண்ண வெச்சிடுவாங்கனு நான் காசே எடுத்துட்டு போகல ..
ஆதவ் : அப்பா காசே இல்லையா ,, நீங்க அப்புறமா சம்பாரிச்சு வாங்கி தரீங்களா .. நான் அழவே மாட்டேன் ப்பா ..வாங்க வீட்டுக்கு போலாம் ...
நான் அப்டியே feel ஆகிட்டேன் .. அப்ப மட்டும் card எடுத்துட்டு வந்து இருந்தேன் கண்டிப்பா வாங்கிட்டு இருப்பேன் ..
அப்பா : ஆதவ் .. நீ சூப்பர் டா . Good boy டா நீ ..
அவன தூக்கி ஒரு முத்தம் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம் .. அவன் சொன்ன மாதிரியே அவன் அழவே இல்ல அடம் புடிக்கவே இல்ல .
ஆதவ் : அம்மா .. நான் ஒரு chappal பார்த்தேன் .. car chappal .. அப்பா கிட்ட கேட்டேன் .. காசே இல்லனு சொல்லிட்டாரு .. ஆனா நான் அழவே இல்ல தெரியுமா ..
அம்மா : நீ செல்ல பாப்பா .. Good boy நீங்க தான் ராஜா ..
ஆதவ் அப்டியே விளையாட போயிட்டான் ..
அப்பா : ச்ச ... அவன் அடம் புடிச்சு கேட்டு இருந்தா கூட பரவா இல்ல டி .. எவ்ளோ அழகா கேட்டான் தெரியுமா .. முடியாதுனு சொன்ன உடனே வந்துட்டான்... அவனுக்கு surprise a .. இன்னைக்கு night phoenix mall க்கு போறேன் அதே shoe வாங்குறேன் ... நாளைக்கு காலைல அவனுக்கு surprise gift கொடுக்குறேன் ..
அப்புறம் திரும்ப phoenix mall கிளம்பிட்டேன் .. வேகமா .. இந்த முறை நடந்து ....
Mall உள்ள போய் , நேரா LifeStyle , kids section போயிட்டு அந்த chappal எடுத்தேன் ....
Staff : சொல்லுங்க..
அப்பா : பையனுக்கு chappal வாங்கனும் ..
Staff : ( என்ன ஒரு look விட்டுட்டு .. ) இது original high quality ..
அப்பா : சரி
Staff : இது Crocs .. branded ..
அப்பா : சரி அதுக்கு
Staff : இது 2000rs ஆகும்
அப்பா : அதுக்கு என்ன இப்போ.. எவ்வளவா இருந்தா என்ன .. இதுல 7 size இருக்கா .. போய் எடுத்துட்டு வாங்க ..
அவன் உள்ள போய், ஒரு 10 mins , 7 size ல அதே chappal தேடி கண்டுபுடிச்சு வெளில வந்து பாக்குறான், என்ன காணும் ...
நான் phoenix mall தாண்டி வந்து 5 mins ஆச்சு ... வீட்டுக்கு slow motion ல நடந்து போயிட்டு இருந்தேன் ..
அட பாவி தம்மா தூண்டு chappal , அது 2000rs .. போங்கடா நீங்களும் உங்க branded செருப்பும் ...
அவன சமாளிச்சு escape ஆகி வரதுக்குள்ள ..sssabbaaa ..
கொஞ்ச நேரம் கழிச்சு lighta feel பண்ண ஆரம்பிச்சிட்டேன் ... அவனோட சந்தோசத்துக்கு ஒரு 2000rs கூட செலவு பண்ண முடியாதா .. இத்தனைக்கும் அவன் அடம் பண்ணி கூட கேட்கல .. எவ்ளோ அழகா கேட்டுச்சு குழந்தை ..
ஆனா என் mind சம dilemma ல இருக்கு ...
இத விட சூப்பர் chappal , cheap a வேற கடைல வாங்கலாம் .. But அவன் கேட்டது கிடைக்குமா தெரியாது ... அதுவும் இவன் maximum one month தான் use பண்ண போறான் அதுக்கு இவ்ளோ costly ஆ எதுக்கு .. ??
Ok .. நண்பர்களே .. இந்த decision நான் உங்க கிட்டயே விட்டுறேன் .. என்ன பண்ணலாம் .. வாங்கலாமா? வேணாமா? .. இல்ல வேற எதாச்சும் பண்ணலாமா ...
Go to this facebook page
Aadhavum Appavum, and give your comments..