Tuesday, April 22, 2014

Flight la போலாம் !!!


 நாங்க எல்லாரும் வீட்டுக்கு வெளில காத்து  வாங்கிட்டு இருந்தோம் ...

அப்போ ஆதவ் ஓடி வந்து,

ஆதவ் :    பாட்டி (என்  அம்மா ) பாட்டி ... அதோ பாரு மேல flight சொய்ங்ங்ங்... னு போது.. 
               பாரு பாட்டி பாரு ..

பாட்டி :   ம்ம்ம் (ஒரு பெரு மூச்சு விட்டுட்டு ).. நானும் இத்தன வருஷமா flight a  இப்டி தான் பார்த்துட்டு இருக்கேன் .. உங்க அப்பன் இருக்கானே ஒரு நாள் கூட என்ன கூட்டிட்டு போனது இல்ல ...
என் ராசா நீயாச்சும் பாட்டிய flight ல கூட்டிட்டு போவியாப்பா...??  

பரிதாபமா ஒரு கேள்வி ...   
என்ன பளார் பளார் னு அடிச்சா மாதிரி ஒரு feeling ..  
கந்து வட்டிக்கு கடன வாங்கியாச்சும் , திருப்பதி வரைக்குமாச்சும் குடும்பத்தோட flight ல போயிட்டு வந்துடனும் டா சாமி ..  

சரி இந்த பய எங்க ஓடுறான்..   flight ல கூட்டிட்டு போனு சொன்னதுக்கு online ல ticket book பண்ண போறானா ??

வீட்டுக்குள்ள குடு குடுனு ஓடி போனவன்   திரும்ப வந்தான் ..  

கைல ஒரு airoplane பொம்மை ...

ஆதவ் :   பாட்டி நீ பின்னாடி உட்காந்துக்கோ நான் முன்னாடி உட்காந்து ஓட்டுறேன்... வா நாம சொய்ங்ங்ங்னு flight ல போலாம் ....

எங்க அம்மாவுக்கு இவ்ளோ சீக்கிரம் அவங்க ஆசை நிறைவேறும்னு நினைக்கல .. திகைச்சி போய்ட்டாங்க  ... :)

அப்பா :  ஆதவ் அப்பாவ விட்டுட்டு போறியே  நானும் வரேண்டா ...

ஆதவ் :   அப்பா நீ என் பக்கத்துல உட்காந்துக்கப்பா ..

பாசக்கார பய நம்மள விட்டு எங்கயும் போக மாட்டான் ....  :) :)   

Lets Go ..    சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......



Like this page for more updates: https://www.facebook.com/aadhavumappavum

No comments:

Post a Comment