Thursday, December 8, 2016

The Best Birthday Gift!!!



Dec 2, 2015 :


"ஐ மழை!!!!"  என்று ரசித்த சென்னை,
"ஐயையோ மழை !!!!!!!$%!!!!!" என்று கதறி கொண்டு இருந்த நேரம்..


சோறு இல்ல, தண்ணி இல்ல
மின்சாரம் இல்ல, நெட்ஒர்க் இல்ல

ஊரே இருண்டு மிரண்டு போய் இருந்தது....

இரவு நேரம் மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட இல்ல... 

முகம் தெரியாமல் பேசி கொண்டு இருந்தோம்.. ⏺⚉⚉

அம்மா:  என்னங்க  இது பேய் மழையா 🌧🌧 இருக்கு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. நாளைக்கு உங்க பிறந்த நாளைக்கு ஏதாச்சும் பணலாம்னு பார்த்தா... இப்டி house arrest la இருக்கோமே.... 😢

அப்பா:  ஒய் குளிச்சே 🛀 நாலு நாளாச்சு இதுல பிறந்த நாள் ரொம்ம்ம்ப முக்கியம்..

அம்மா: என்ன தான் இருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் ஏதாச்சும் செய்வோம் இந்த வருஷம் இப்டி மொக்கையா போச்சே... 

அப்பா: ரொம்ப பீல் பண்ணாத, போன வருஷம் பிறந்த நாள்னு உன் பிள்ளைக்கு பிடிச்ச cake,  அவனுக்கு பிடிச்ச படம்,  பீச்னு தான போனோம்.. எனக்காக ஏதோ பண்ணிட்டா மாதிரி ஓவர் scene போடறீங்க...

ஆதவ் தூங்கிட்டானு நெனச்சா , பயபுள்ள எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்கு..

ஆதவ்:  அப்பா.... அப்போ உங்களுக்கு என்ன தான் புடிக்கும் ....

அப்பா:  எனக்கா ...  ம்ம்ம் ...       என்ன தனியா விட்டாலே போதும்டா ..   எங்கயாச்சும் ஒரு மலை  போல போய் உட்காந்துடுவேன் ..   அதான் எனக்கு புடிக்கும் ..

ஆதவ்:  மலை ⛰ போல போய் என்ன பண்ணுவீங்க ?

அம்மா: ம்ம்  பூ பரிச்சிட்டு இருப்பாரு ... யோவ் கல்யாணத்துக்கு முன்னாடி நீ பிறந்த நாள்க்கு cake கூட வெட்டினது கிடையாது... உனக்கு போய் செஞ்சோம் பாரு.... 
 (பையன் முழிச்சிகிட்டான்னு இதோட விட்டா .. இல்லைனா நான் சொன்ன dialogue க்கு , counter வேற மாதிரி இருந்திருக்கும் ..)

அப்பா: Right விடு.... நாளைக்கு குளிக்காம கொள்ளாம , சாக்கடைல நீந்தியாச்சும் போய்..  ITC Chola ல familya birthday celebrate பண்றோம்...

அம்மா:   வாசல்ல இருக்க கோவிலுக்கு போறோமானு பாருங்க.... தூங்குங்க நாளைக்கு பேசுவோம்...   💤 💤


Dec 3, 2015 :


காலைல என்னோட கடமையை செய்ய கிளம்பிட்டேன்.. 👨💨..  

ஆஃபீஸ் க்கு இல்ல...

எங்கயாச்சும் 2 பாட்டில் தண்ணி, காய்கறி, நூடுல்ஸ் பாக்கெட், இதெல்லாம் கிடைக்குதான்னு வேளச்சேரி முழுக்க தேடனும் தண்ணில மூழ்காம... 

ஆதி மனிதன் வேட்டைக்கு போவானே அந்த மாதிரி.... 

எப்படியோ அன்னைக்கு தேவைக்கு கிடைச்ச பொருளோட வீட்டுக்கு வந்தேன்...  

பிறந்த நாள் பத்தி எந்த நினைப்புமே இல்ல....

அப்பா:  ஆதவா,  வெளில வாடா இதெல்லாம் எடுத்துட்டு போ...

ஆதவ்:  அப்ப்பா ,  என்னப்பா இவ்ளோ நெனஞ்சிடீங்க .... அவ்ளோ தண்ணியா இருக்கு ...

அப்பா:  டேய் டுங்கூஸ்*... ( தலைக்கு மேல கைய தூக்கி காட்டி  ..)  இவ்ளோ height தண்ணி,🌊🌊  அதுல ஒரு கைல இதெல்லாம் புடிச்சிட்டு இன்னொரு கைலயே நீச்சல் அடிச்சு 🏊🏊 assaulta வந்தேன்டா அப்பா .... இதெல்லாம் யாருக்காக  உனக்காக தான் ..  

asusual  கொஞ்சம் over dose ல அடிச்சு விட்டேன் ...

ஆதவ்:  அப்பா உங்களுக்காகவும் நான் ஒன்னு வெச்சிருக்கேன் ..  கண்ண மூடுங்க ...

( மண்டூஸ்*  என்ன வெச்சிருக்கானு தெரிலயே ... கண்ண மூடிக்கிட்டேன் ..)

ஆதவ்:  கண்ண தொரங்க ..  Happy Birthday அப்பா .....  உங்களுக்கு ரொம்ப புடிச்ச gift* இந்தாங்க ....

and the gift* ...




(click the image or zoom to see in detail)
கன மழை 🌧🌧☔ ல மூழ்காத எங்கள் வீடு , ஆனந்த கண்ணீர் மழையில் மூழ்கியது.. 😅😅😍





Appendix :

செல்ல பெயர்கள்: 

டுங்கூஸ் :  டுங்கூஸ் னா ,  strong  boy னு சொல்லி ஏமாத்தி வெச்சிருக்கேன் 

மண்டூஸ் :  மண்டூஸ் னா ..  brilliant boy 

Gift Description :    அந்த gift picture பார்த்து புரியாத மக்களுக்கு ....     ஒரு மலை அதுல நான் ஏறிட்டு இருக்கேன் ...  ஏறி போய் அந்த பூ பறிக்க போறேன் ...    நல்லா பார்த்தீங்கனா அந்த பூ அந்த மலை சைஸ்க்கு  என்ன விட பெரிசா இருக்கும்  :)