Sunday, March 22, 2015

Operation 'Wake Up'

( The story is a complete one with Part 1 and 2, those who have read 'Part 1', can just scroll down and start from 'Part 2', but I would recommend you to read from the beginning to get the flow right.. :) )


நேரம் : காலை 7:30

     நாளின் மிக வேகமான 30 நிமிடங்கள் ஆரம்பம் .....
     Ready  1............ 2...........  3......


அம்மா:   ஆ ஆ ஆ த வ் வ் வ் .......   School க்கு time ஆச்சுடா ... எழுந்துரு ...

அவன் அம்மா 120 decibel sound ல கத்திகிட்டு இருந்தா ...  

மரத்துல இருந்து காக்கா ல பறக்குது ...
பக்கத்துக்கு வீட்டு குழந்தைலாம் பயந்து அழுவுது ..
வீட்டு ஜன்னல் கண்ணாடிலாம் crack ஆகுது ..


இங்க Zoom in பண்ணி பார்த்தா நம்மாளு மட்டும் எந்த சலனமும் இல்லாம நல்லா பப்பரப்பனு தூங்கிட்டு இருந்தான் ...
and
பக்கத்துல நானும் தூங்கிட்டு இருந்தேன் ..

அட தப்பா நினைகாதீங்க .. அந்த சத்தத்துல ஒரு ரெண்டு நிமிஷத்துல நான் எழுந்துட்டேன்... அவன் தான் எழுந்துக்கல ...

அம்மா:  அப்பனும் புள்ளையும் .. .....  ( அட விடுங்க .. இந்த dialogue உங்களுக்கே தெரியும் ..   இதுக்கு முந்துன கதைலையே நிறைய  சொல்லிட்டதால , skip பண்ணிப்போம் )

7:32 A.M 

Lets begin..  இவன் கிட்ட கத்துனா வேலைக்கு ஆகாது .. 'Action' தான்.

அவன அப்டியே bed ல இருந்து உருட்டி தூக்கி கீழ போட்டேன் ...  நாம எந்த position ல விட்றோமோ அதே position ல அப்டியே தூங்குறான் ...

அப்புறம் தர தர னு இழுத்துட்டு போய் sofa ல போட்டு,  மூஞ்சுல தண்ணி எல்லாம் அடிச்சு .. ம்ம்ம் ... ஒரு reaction இல்ல ..
நம்ம 'Action' பத்தலையோ...

ஓகே ...  Next  ... 'Emotions'....

அப்பா:  ஆதவ்,  எல்லா பசங்களும் கிளம்பிட்டாங்கடா...
ஸ்ரீநிதி ready ஆகிட்டா ..  சோனல் கிளம்பி school க்கு போய்ட்டா..
மேல் வீட்டு பாப்பா காலைலயே எழுந்துடுச்சு ...
நீ மட்டும் தான் அசிங்கமா இன்னும் தூங்கிட்டு இருக்க ...
குட்டி குரங்கு கூட காலைல எழுந்து வந்துடுச்சு .. ( Daily பக்கத்துக்கு IIT காட்டுல இருந்து ஒரு monkey family visit பண்ணும் )

இப்டி அவன் ego வ touch பண்ற மாதிரி சொன்னா தான்  ... lighta ஒரு reaction கொடுப்பான் ..  அத அப்டியே use பண்ணிக்கனும் ...
அலேக்கா தூக்கிட்டு போய் .. brush கைல கொடுத்தா ... தூங்கிட்டே brush பண்ணிடுவான் ..

7:37 A.M 

இதுக்கு அப்புறம் 'குளியல்' ..   அத அவங்க அம்மா take over பண்ணிப்பா ...

7:41 A.M 

குளிச்சிட்டு நல்லா மழைல நனைஞ்ச கோழி மாதிரி வருவான் .. இதுக்கு அப்புறம் என்னோட  duty .

அவன் அம்மா , towel , dress , lotion, powder, etc.. etc ..  ஒரு பெரிய செட் எடுத்துட்டு வந்து போடுவா ..

அப்பா :  இந்த அவசரத்துல இந்த lotion , powder , அப்புறம் இது என்னதுனே தெரில .. இதெல்லாம் தேவையா .. அப்டியே dress போட்டு அனுப்புவோம்...  நான் ல சின்ன வயசுல இருந்து இது வரைக்கும் powder கூட போட்டது இல்ல...  ..

அம்மா :  நீங்க ஒரு அழுக்கு மூட்டை ,  அதான் இப்டி கரி கலர் ல இருக்கீங்க .. என் பையன் அழகு ராசா .. இல்ல டா ... ஒழுங்கா எல்லாத்தையும் போடுங்க ...

இவன் என்னமோ அஜித் குமார் கலர் ல இருக்க மாதிரி..  என்ன சோப்பு போட்டாலும் இவன் அப்டியே என்ன மாதிரி தான் இருக்கான் ..

7:45 A.M 

இனிமேல் தான் toughest task .. அவன சாப்ட  வைக்கணும் ..நல்ல வேளை இத அவ தான் பண்ணுவா ..

ஆதவ் :   சுட்டி டிவி போட்டா தான் சாப்டுவேன் ...

சுட்டி டிவி ல ஜாக்கி சான் , விஜய் குரல்ல பேசிட்டு இருப்பார் , வில்லன் ரகுவரன் மாதிரி பேசுவான் .. அந்த மொக்கைய அவ்ளோ  சீரியஸா பார்த்துட்டு இருப்பான் ...

இந்த sequence தான் ரொம்ப நேரம் ஆகும்...  அப்புறம் சாப்புடறதுக்கு ஒரு defined time கிடையாது ..   அவன் சாப்பிடும் போதே அவனுக்கு Snacks , School bag எல்லாம் pack பண்ணி வைக்கணும் ..

7:55-8:00 

அவன் சாப்பிட்டு  முடிச்ச உடனே பால்...    அவன் பால் குடிக்கிற gap ல , race காருக்கு tyre  மாத்துற மாதிரி ,  ஆளுக்கொரு கால புடிச்சு , shocks , shoe மாட்டி விட்டு, time பார்த்தா 8:00 மணி ஆகிட்டு இருக்கும் .. ஆனா இவன் அப்போ தான் slow motion ல பால் குடிச்சிட்டு  இருப்பான் .

அம்மா :  van வந்துட்டு இருக்கும் டா .. சீக்கிரம் ..  ஏங்க நீங்க போய் Van வருதா பாருங்க .. வந்துட்டா நிக்க சொல்லுங்க ..

வேன் காரன்  அப்ப தான்  over punctuality காட்டுவான்...  30 secs wait பண்ணிட்டு இல்லைனாலும் கிளம்பிடுவான் ..    அவன புடிச்சு ஒரு two minutes wait பண்ண சொல்லி..
அதுக்குள்ள நம்மாளு,
பால குடிச்சு,
 Bag, books , ID card எல்லாம் தேடி  மாட்டி,
சாமி கும்பிட்டு, பொட்டு அழகா வெச்சு,

Slow motion ல நடந்து வருவான் ..   வேன்காரன் நம்மள கேவலமா பாக்குற மாதிரி இருக்கும் ..

அவன ஓடி போய் தூக்கிட்டு, திரும்ப  ஓடி வந்து வேன்ல ஏத்தி , உட்கார வெச்சு , டாட்டா சொல்லிட்டு திரும்ப வரதுக்குள்ள,
 ஸ்ஸ்ஸ்ஸப்பா...
 தெலுங்கு படத்துல வர chasing sequence மாதிரி பரபரப்பா  இருக்கும் .




அப்பா :  ஏண்டி daily இதே பொழப்பா இருக்கே .. ஒரு நாளாச்சும் சீக்கிரம் எழுந்தா இவ்ளோ ஓட வேணாம் ல.

அம்மா :  சொல்ற நீங்க பண்றது தான ..  இப்போ திரும்ப போய் தூங்கிடுவீங்க .. நான் தான எல்லாத்தையும் பாக்கணும் ..

அப்பா : Rightu .. பண்றேன்டி ...   இதுக்கு ஒரு வழி பண்றேன் ..

 Operation 'wakeup',
இனிமேல் தான் கதையே :) ..  Part-2 ல பாப்போம் ...

Operation 'wakeup'  Part-2:


மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சிட்டே இருந்தேன் ....

"என்ன பன்னலாம்....."

அம்மா : என்ன இந்த அரை மணி நேரத்துக்கே tired ஆகிட்டீங்க ? full day அவன பார்த்துகனுமே என் நிலைமைய யோசிச்சு பார்த்தீங்களா ?

அப்பா :  அட நீ வேற,  அவன எப்படி காலைல சீக்கிரம் எழுந்துக்க வைக்கிறதுனு யோசிச்சிட்டு இருக்கேன்டி , as  a  R & D Head, I believe there should always be a strategic solution to any given problem if we apply our research and analysis coupled with innovation.....

அம்மா :   காலைல இன்னும் பல் தேய்க்கல???  இவ்ளோ நாறுது ...

அப்பா :  Right விடு ... உன் கிட்ட போய் சொன்னேன் பார் ..   இன்னைக்கு night எங்க status meeting இருக்கும்ல அதுக்குள்ள நான் ஒரு சம ஐடியா pickup பண்றேன் பார் ..


Status Meeting :
   Office ல நான் மீட்டிங் attend பண்றேனோ இல்லையோ ... Daily night இவன் கூட ஒரு 30 minutes status meeting இருக்கும் ..  அதுல என்ன நடக்கும் ..   நீங்களே பாருங்க ..

Time :  9:30 p.m

அம்மா :   உங்க பையன் சாப்டுட்டு உங்களுக்காக தான் wait பண்ணிட்டு இருக்கான் .. asusual இன்னைக்கும் நீங்க  late ...  சரி உங்க  research and analysis coupled with innovation  என்ன ஆச்சு ?

அப்பா :   சம ஐடியா ஒன்னு புடிச்சிட்டேன் ...  என் பையன் என்ன மாதிரியே ரோஷக்காரன் and  பாசக்காரன்..  அத வெச்சு நான் அவன எப்டி மடக்குறேன் பாரு ..  for further details please join our status meeting .

எங்க apartment வாசல்ல இருக்க staircase dhan எங்க meeting room .


ஆதவ் :   அப்பா இன்னைக்கு office ல என்ன ஆச்சு ??

அப்பா :  இன்னைக்கு office ல cricket விளையாடினோம்..   சம fast ball போட்டங்களா ... அப்பா அத அப்டியே சம height தூக்கி sixer அடிச்சேன் தெரியுமா ..

ஆதவ் :   அப்டியே வானத்து heightaa ???

அப்பா :  ஆமாண்டா ..  அடிச்ச ball மேல ஒரு aeroplane போச்சு பாரு ... அது மேலயே போய் விழுந்துச்சு .... அப்புறம் புதுசா வேற ball தான் வாங்கி ஆடுனோம் ..

ஆதவ் :   நீங்க தான் winner ஆகிடீங்களா ??

அப்பா :  இல்லடா ரெண்டு ball இப்டி அடிச்சு தொலைஞ்சு போச்சா ... அப்புறம் மேட்ச் நடக்கவே இல்ல ...   சரி உன் school ல என்ன ஆச்சு ..?

ஆதவ் :  அப்பா இன்னைக்கு எங்க school bathroom ல பெரிய சிங்கம் வந்துச்சு ...

அப்பா :  என்னது bathroom ல சிங்கமா ??

ஆதவ் :  ஆமா எல்லாரும் பயந்துட்டோம் first ..   அப்புறம் நான் போய் அந்த சிங்கத்து கிட்ட கேட்டேன் ..  நீ என் காட்டுக்கு போகாம இங்க வந்தனு ...  அதுக்கு போய் அந்த சிங்கம் என்ன கடிக்க வந்துடுச்சு ....

அப்பா :   ஐயயோ அப்புறம் ..

ஆதவ் :  எனக்கு சம கோவம் வந்து.. அந்த சிங்கம் வால புடிச்சு ... சொய்ங்..  சொய்ங்...  சுத்தி தூக்கி போட்டேன் பாரு .... அது அப்டியே பறந்து போய் காட்டுக்குள்ள விழுந்துச்சு ...

அம்மா :   போதும்டா சாமி ...  அப்பனுக்கு புள்ள தப்பாம இருக்கு ..  என் வேலையெல்லாம் விட்டு உங்க கதைய போய் கேட்க வந்தேன் பாரு ..  உங்க 'coupled with innovation'  சொல்லுவீங்களா .. இல்ல நான் போய் தூங்கவா ..

அப்பா :  சரி சரி...   இப்ப பாரு ... ஆதவ் ... Daily அப்பாவும் அம்மாவும் உன்ன காலைல schoolக்கு கிளப்பறதுக்கு எவ்ளோ கஷ்ட பட்றோம் ... உனக்கு எங்கயாச்சும் பொறுப்பு இருக்கா ...

ஆதவ் :  அப்பா நான் என்ன செய்ய அப்போ தான் எனக்கு தூக்கம் தூக்கமா வருது

அம்மா :  அட இதான் உங்க innovation aa ..  அவன் கிட்ட போய் .. மொக்க போட்டுட்டு இருக்கீங்க..

அப்பா :  இரு.. டி ...    இங்க பாரு ஆதவ் .. daily  காலைல உன்ன எழுப்ப நாங்க எவ்ளோ கஷ்ட பட்றோம் னு உனக்கு தெரியல .. அதே மாதிரி எல்லா வீட்டு பசங்களும் எவ்ளோ சீக்கிரமா காலைல எழுந்துக்குறாங்க னும் உனக்கு தெரியல ..

அம்மா :  அதுக்கு ?

அப்பா :  இவ வேற இரு டி... ஒரு flow ல போயிட்டு இருக்கு ல ... So morning 7:30 ல இருந்து உன்ன எவ்ளோ கஷ்ட பட்டு நாங்க எழுப்புறோம் னு வீடியோ எடுக்க போறேன் ...  நாங்க என்ன பண்ணாலும் நீ எப்டி மதிக்காம தூங்குறேன்னு உனக்கே வீடியோ எடுத்து காட்ட போறேன் ... அத அப்டியே உன் friends கிட்டயும் காட்ட போறேன் ... அப்போ தான் உனக்கு புரியும் ...

அம்மா :  என்னங்க நீங்களா யோசிச்சீங்க????

ஆதவ் :   (உடனே எங்க இருந்து தான் அவன் கண்ணுல தண்ணி வரும்னு தெரியாது... அழுத மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு.. )  ஸ்ரீநிதி கிட்டயும் சொல்லுவீங்களா ???

அப்பா : அவ தான் first ...   Ok .. The plan is ready ... நாளைக்கு பார்போம் ....

கொஞ்ச நேரம் lighta அழுதுட்டு இருந்தவன் .. திடீர்னு என்னமோ போய் அவன் அம்மா காதுல சொன்னான் ...  ரெண்டு  பேரும் ஏதோ பேசிகிட்டாங்க ...  அப்புறம் அழுத பையன் முகத்துல அவ்ளோ சிரிப்பு ...
( சரி என்னமோ சொல்லி அழுத பையன சமாதான படுத்திட்டா...  Lets  Sleep ..)

Operation Day :
Time :  7:30 A.M

நான் எப்பவுமே தரைல தான் படுப்பேன் ... அட simplicity லா இல்ல ... இந்த பய நம்மள bed ல இருந்து தள்ளி விட்டுடுவான் ... so permanenta தரைல settle ஆகிட்டேன் ..

காலைல என்னமோ sound கேட்டு அப்போ தான் முழிச்சு,  time பாக்க  என் cell phone தூங்கிட்டே  தேடுனேன் (தடவிட்டு இருந்தேன் ) ..
Cell phone காணும் ..

அப்புறம் ஒரே சிரிப்பு சத்தம் ... திரும்பி பார்த்தா .....

இந்த பையன் bed மேல இருந்து என்ன வீடியோ எடுத்துட்டு இருக்கான் .....

ஆதவ் :   அப்பா ... bad boy நீங்க தான் இவ்ளோ நேரம் தூங்குறீங்க ... இங்க பாருங்க .. வீடியோ எடுத்தாச்சு .. உங்க friends கிட்ட காட்ட போறேனே ....  bow .. bow ..


I was cornered (literally.. தரைல corner ல இருந்தேன் ல ..)...

அப்பா :  அட படுபாவி ..... நீ எப்படா எழுந்த .. time 7:30 தான ஆகுது ..

அம்மா :   நீங்க தான் எல்லா plan பண்ணிட்டு தூங்கிட்டீங்க ... உங்க பையன் நேத்தே pakka plan பண்ணிட்டான் ...  நீங்க எழுந்துகிறதுக்கு முன்னாடியே எழுந்து உங்கள வீடியோ எடுக்க  என்ன முன்னாடியே  எழுப்ப சொல்லிட்டான் ...

அப்பா :  அட பாவிகளா அப்போ நான் தான் out aa .....
              Anyway என் operation success தான் ... இந்த plan பண்ணதால தான ... அவன் சீக்கிரம் எழுந்தான் ..

அம்மா :  yes ... Operation success ... patient out  னு சொல்லுவாங்க .. இங்க டாக்டரே Out ...

After few moments of silence ..

..

....

.......

...........

...............

......................

ஆதவ் :   அம்மா ... இந்த வீடியோ எப்டி whatsapp ல அனுப்புறது ..???

அப்பா :  ஏய் ... மொதல்ல போன் அவன் கிட்ட இருந்து புடுங்குடி ...




Like here :)  https://www.facebook.com/aadhavumappavum