Saturday, June 25, 2016

Maths Scientist!!



ஆதவ் ரொம்ப seriousa Maths படிச்சிட்டு இருந்தான்..

3+2=5
4+2=6
5+2=7

ஆதவ் :   அப்பா , நானே Maths  fulla  கத்துக்கிட்டேன் ...  பாக்குறீங்களா ....

அப்பா :  டேய் ...  டோங்கிலி தலையா ...   ( One of the many names, I call him .. ) இது மட்டும் Maths இல்லடா .. இன்னும் நிறைய இருக்கு ..   Subtraction .. multiplication .. Division ...

ஆதவ் :  அதெல்லாம் சம easy ..

( நம்மள மாதிரியே build up .. இப்ப மாட்டுவான் பாருங்க ... )

அப்பா : சரி நான் subtraction கேட்குறேன் சொல்றியா  .. 6-4 எவ்ளோ?

ஆதவ் :  ம்ம்ம் ... (விரல் விட்டு ஒன்னு ஒன்னா count பண்ணி ... )    10 ..

அப்பா :  டேய்  இது subtraction,    addition  இல்லடா .. 6-4 =2

ஆதவ் :   என்னப்பா , இவ்ளோ கம்மியா சொல்றீங்க ...

அப்பா :  டேய் .. மண்டூஸ் ..  Subtraction வேற , Addition  வேற ..

கைல  6  விரல  விரிச்சு காமிச்சு ,
இத பாரு , 6 இருக்கா ,  இதுல 4 போச்சுனா , எவ்ளோ இருக்கு?

ஆதவ் :  2

அப்பா : Correct ..  இப்போ   Level  2:   12-2 எவ்ளோ ...

ஆதவ் ஒரு ஒரு விரலா 1,2,3 னு எண்ணிட்டு இருந்தான் ...

அப்புறம் பத்து விரலையும் விரிச்சு காமிச்சு ...

ஆதவ் :  அப்பா .. தப்பு தப்பா கேட்குறீங்க ... இங்க பாருங்க கைல 10 விரல் தான் இருக்கு ...12  எப்டி count  பன்றது

அப்பா : நீ mind ல maths போட கத்துக்கோ டா ... பாப்பாவா நீ .. இன்னும் விரல் விட்டு maths போடற ...

ஒரு small silence ..  என்னவோ யோசிக்கிறான் ...

ஆதவ் :  அப்பா , நாம எதுக்கு maths  படிக்கிறோம் ?

அப்டியே பாவமா மூஞ்ச வெச்சுகிட்டு கேட்டான் ..

 ( that  moment   'பாலுங்கிறது உங்க பேரு , பாலு தேவர்ங்கிறது நீங்க வாங்குன பட்டமா ... பட்டமா .. பட்டமா .. ' )

இந்த twist  நான் எதிர் பார்க்கவே இல்லையே ....

OK  அவனுக்கு இந்த உலக அறிவ கத்து குடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு ....

அப்பா :  ஆதவ், நீ scientist  aaganum ல

ஆதவ் :  ஆமாம் ..

அப்பா :  Maths is the queen of all sciences ...

ஆதவ் :  அப்டீன்னா .....

நான் ஏதோ chinese ல திட்டுறேன்னு நெனச்சுகிட்டான் போல ..  சரி  Basics ல இருந்து வருவோம் ..

அப்பா :  பட்டு ரோசா ...   Car எவ்ளோ speed போகுது ..  எவ்ளோ தூரம் போகுதுனு எப்டி சொல்றாங்க ...

ஆதவ் :  எப்புடி ..

 (கார் சொன்ன உடனே interest ஆகிட்டான் ..)

அப்பா : Maths  வெச்சு தான்டா ..   அப்டியே மழை எப்போ வரும்னு கரெக்டா எப்படி சொல்ராங்க .. அதே maths வெச்சு தான் ..

அப்டியே ஓவர் emotional ஆகி .. car  ல இருந்து .. விண்வெளி வரைக்கும் Maths dhan use பன்றாங்கனு  அட்டகாசமா explain பண்ணிட்டு இருந்தேன் ..  அவன் .. வாய பொளந்து கேட்டுட்டு இருந்தான்..

அப்பா :  Now Mr. Aadhav..    'This is called Maths' ..

ஒரு அற்புதமான விளக்கம் கொடுத்துட்டோம்னு  பெருமையா அவன பார்த்தேன் ...

ஆதவ்  :  Discol Maths aa ..  அப்டீன்னா என்னப்பா ...

அப்பா :  டேய் டோங்கிலி ..   'This  is called Maths' டா   ..

சரி அதெல்லாம் விடு ..  நீ Scientist ஆகணும்னா கண்டிப்பா Maths படிக்கணும் ..

ஆதவ் :  அப்பா .. நீங்களே ஒரு 'Maths Scientistaa ..'  உங்களுக்கு எல்லா Maths சும் தெரியுமா ..

அப்பா : அதெல்லாம் ரொம்ப easy ஆதவா ..  இப்போ அப்பா பெரிய பெரிய Maths ல விரலே use பண்ணாம mind லயே போடறேன் பாக்கறியா ...


25+5=30

30+25=55

ஆதவ் :  அப்பா சூப்பர் ... நான் கேட்குறேன் சொல்றீங்களா ...

 30+30 எவ்ளோ

அப்பா :  60

ஆதவ் :  60+40

அப்பா : 100

ஆதவ் :  100+200

அப்பா : 300

ஆதவ் :  எவ்ளோ easya சொல்றீங்க ...

அப்பா :  ஒரு 'Maths  Scientist' க்கு  இதெல்லாம் ரொம்ப easy ஆதவா ..

கொஞ்ச நேரம் யோசிக்க ஆரம்பிச்சுட்டான் ...  அப்புறம் ..

'சிப்பி இருக்குது , முத்தும் இருக்குது'  பாட்டுல ஸ்ரீதேவி சொல்வாளே .. 'இப்ப பாக்கலாம்' அதே body language ல ரெடி ஆகிட்டு ..

ஆதவ் :   Ok  இப்போ Level 2:  இதுக்கு answer பண்ணுங்க ...

10 trillion plus  25 billion plus  150 crores plus 25 lakhs minus 50   எவ்ளோ ???

என்னடா ஒரு Scientist க்கு வந்த சோதனை ..

அப்பா :   மண்டூஸ் மண்டையா ....   அப்பா 'Maths Scientist' லா இல்லடா ...  ஒரு சாதாரண 'Software Engineer'...
Total  surrender ... இதுக்கு மேல இவன் கூட இருந்தோம் ..  நம்ம knowledge நாறடிச்சிடுவான் ...

இன்னைக்கு இவ்ளோ படிச்சது போதும்டா ..   எனக்கு முக்கியமா ஒரு office work இருக்கு ..  அப்புறமா பேசுறேன் ...         Escape .......


Like it?   Visit https://www.facebook.com/aadhavumappavum/  and 'Like' for more Stories...