அப்பா : 1,2,3,4..... 10 ஜூட் ..
ஆதவ் எனக்கு பின்னாடியே முகத்த ஒரு towel போட்டு மூடிட்டு இருந்தான் ..
(ஒளிஞ்சுகிட்டு இருக்கானாமா ....)
நானும் அவன கண்டு புடிக்காத மாதிரியே ...
அப்பா : ஆதவ் எங்க காணும் .. இங்க தான இருந்தான் ... கண்டே புடிக்க முடியலையே...
சொல்லிட்டே வேற எங்கயோ தேடிட்டு இருந்தேன்...
இதுல சத்தமா சிரிப்பு வேற அவனுக்கு . புத்திசாலிதனமா ஒளிஞ்சி இருக்கோன்னு பெருமைல சிரிக்கிறானா இல்ல லூசு மாதிரி நான் வேற எங்கயோ தேடிட்டு இருக்றத பார்த்து சிரிக்கிறானா தெரியல ...
அவன பார்க்காத மாதிரியே அவன cross பண்ணி போனேன் .. அப்ப suddena towel எடுத்துட்டு
ஆதவ் : பே ....... .. அப்பா பயன்துடீங்களா ... எப்படி பயமுறுதிட்டேன் பார்த்தீங்களா உங்கள ...
அப்பா : நான் பயப்படவே இல்லையே ... அப்பா என்னைக்கு டா பயந்து பார்த்து இருக்க .. (night தான் நல்லா தூங்கிடுவானே .. எப்படி பார்த்து இருப்பான் :) )
ஆதவ் : அப்பா நானும் பயப்படவே இல்லப்பா...
அப்பா : டேய் நீ தான என்ன பயமுறுத்துன அதுக்கு நீ ஏன்டா பயப்படனும் ? நான் தான பயப்படனும் ..
ஆதவ் : நான் தான உங்கள பயமுறுத்துன அதனால தான்ப்பா நான் பயப்படவே இல்ல....
அப்பா : Right ... தெளிவா பேசுற .. பெரிய அரசியல்வாதியா வருவ டா நீ
No comments:
Post a Comment