Saturday, December 27, 2014

எனக்கு ரொம்ப புடிச்சது !!!

ஆதவ் எங்க இருந்தோ ஒரு pencilbox  எடுத்துட்டு வந்தான் ..

ஆதவ் :  அப்பா எனக்கு pencil  box கெடச்சுது .. ஸ்ரீநிதி க்கு pink புடிக்கும் ல அதான் அவளுக்கு pink box ... எனக்கு yellow தான் புடிக்கும் அதான் yellow box .

அப்பா :  Oh உனக்கு yellow தான் புடிச்ச கலரா ஆதவ் ..

ஆதவ் :  ஆமாம்ப்பா எனக்கு yellow தான் புடிக்கும் ..yellow , brown ,red ..

(எல்லா கலரும் சொல்றான் .. .. எவ்ளோ கலர் சொல்றான்னு பாப்போம் .. )

அப்பா :  அப்புறம் ...

ஆதவ் :  blue

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  white

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  Green

அப்பா :  அப்புறம் ..

(யோசிக்க ஆரம்பிச்சுட்டான் ....   அவ்ளோ தான் போல இருக்கு ..  )

அப்பா :  அப்புறம் எதுடா புடிக்கும்??

ஆதவ் :  அப்பா கிட்ட வாங்க உங்க காதுல சொல்றேன் ...

(என்னமோ யோசிச்சுட்டான் ... :) )

அப்பா : ( குனிஞ்சு அவன் கிட்ட போய் .. ) சொல்றா ..

ஆதவ் :  அப்புறம் எனக்கு உங்கள தான்பா ரொம்ப புடிக்கும் ...


Nothing will best describe that moment than a small drop of tear from my eyes..

Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum



No comments:

Post a Comment