Saturday, February 21, 2015

Naughty Corner!!


நம்ம சின்ன வயசுல , class ல சேட்டை பண்ணா , வெளில போடா அயோக்ய rascal னு teacher நம்மள  நாலு சாத்து சாத்தி தூரத்திடுவாங்க...
ஆனா இப்போ அடிச்சாலே "போலீஸ கூப்டுவேன்" னு சொல்றதால , teachers வேற  techniques எல்லாம் try பண்றாங்க ...
அதுல ஒன்னு தான் , பசங்க சேட்டை பண்ணா, வெளில போனு  சொல்றதுக்கு பதிலா , "Go Stand in Naughty corner" னு சொல்றாங்க ..

இப்போ கதைக்கு வருவோம் .

ஒரு usual Night
Time 11:00

Asusual  ஆதவ் தூங்காம  over ஆட்டம் போட்டுட்டு இருந்தான்.  திடீர்னு bed ல ஏறி ஒத்த காலுல நின்னான்...

( தவம் பண்றானோ  ...)

அப்பா :  ஏன்டா ஒத்த காலுல நிக்குற

ஆதவ் :  அப்பா காலு வலிச்சா , கால மாத்தி மாத்தி நிக்கனும்ப்பா , நான் naughty corner ல நிக்கும் போது இப்டி தான் நிப்பேன் .

அப்பா :  அட பாவி நீ ஏன்டா naughty corner ல போய் நின்ன ?

(பரிதாபமா மூஞ்ச வெச்சுகிட்டு )
ஆதவ் :  இல்லப்பா நான் ஒண்ணுமே பன்னல ..

அப்பா :  டேய் ஒன்னும் பண்ணாம ஏன்டா மிஸ் உன்ன naughty corner ல நிக்க வெச்சாங்க ..

ஆதவ் :  இல்லப்பா ,  Akshara அழுதுட்டே இருந்தா , நான் அழாதனு சொல்லி , இப்டி கண்ண தொடச்சேன், (என் கண்ண தொடச்சு demo காமிச்சான் .), அதுக்கு மிஸ் என்ன naughty corner போ சொல்டாங்கப்பா ..

(ச்ச பையன் எவ்ளோ பாசமா இருந்திருக்கான் .. அதுக்கு போய் இந்த லூசு மிஸ் இப்டி பண்ணிடுச்சே ..)

அப்பா :  ஐயயோ , சரி akshara ஏன்டா அழுதா ??

ஆதவ் :  அவ கிட்ட இருந்து மிஸ் ID card புடுங்கிட்டாங்க .. அதுக்கு போய் அழுறா .

( Naughty corner மாதிரி இது ஏதோ புது punishemnt போல.. )

அப்பா : அவ ரொம்ப சேட்டை பண்ற bad girla .. அவ கிட்ட எதுக்கு டா ID card புடுங்கிட்டாங்க ?

ஆதவ் :  அப்பா இங்க கிட்ட வாங்களேன் சொல்றேன் .

அடுத்த demo போல ..
அவன் கிட்ட கூப்பிட்டு , அவன் கழுத்துல இருந்த செயின் எடுத்து என் கழுத்துல இருந்த செயின்குள்ள விட்டு ..

ஆதவ் :  நானும் akshara வும் இப்டி ID card வெச்சு விளையாடிட்டு இருந்தோமா, மிஸ் எங்கள பார்த்துட்டு ID card புடுங்கிட்டாங்க அப்பா .. அதுக்கு அவ அழுதா , நான் அழாத சொன்னேன்..  அதுக்கு போய் என்ன naughty corner ல நிக்க சொல்டாங்க ..

(Good explanation ...   மறுபடியும் அதே பாவமான மூஞ்சு ... )

அப்பா :  அடபாவி culprit நீ தானா ..  இது தெரியாம உன் மிஸ் லூசுனு திட்டிட்டேன், aksharava bad girl னு வேற சொல்லிட்டேனே ...