Friday, November 29, 2013

Snail கடிக்குமா கடிக்காதா?

28-10-2013

Time: 12:15 A.M (MidNight)

ஆதவ்:   அப்பா Snail..
அப்பா :  என்னடா Snail ku ..
ஆதவ் :  அப்பா Snail  கடிக்காதா ?
அப்பா :  கடிக்காதுடா
ஆதவ் :  என்ன Snail  கடிக்கும்?
அப்பா :  எந்த Snail ume  கடிக்காது
ஆதவ் :  பெரி.... பெரிய Snail  கடிக்காதா?
அப்பா :  கடிக்காது டா
ஆதவ்:   குட்டி Snail  .....
அப்பா :   குட்டி  snail um  கடிக்காது...
ஆதவ் :  ஏன் கடிக்காது ?
அப்பா :  குட்டி Snail  ku  பல்லே இல்ல ல அது எப்டி கடிக்கும் ?

( a small  pause from  ஆதவ்  . ..
           சூப்பர் டா , மடக்கிட்டோம் இப்ப  பேசுடா......)

ஆதவ் :  பெரிய Snail ku பல்லு இருக்கா ?
அப்பா :  இல்லடா ..
ஆதவ் :  நமக்கு பல்லு  இருக்கா ?
 (ஆஆ ஆ ஆ ஆஆ ......)

அப்பா :  நமக்கு தான் பல்லு இருக்கே
ஆதவ் :  ஏன் பல்லு இருக்குது ?
அப்பா :  நாமலாம் மனுஷங்க ல நம்ம கடிச்சு கடிச்சு சாப்டனும் ல அதான் பல்லு இருக்குது ..
ஆதவ் :  அது ?
அப்பா :  அது கடிச்சு கடிச்சு சாப்டாதுல அதான் பல்லு இல்ல ..

(again  a  pause ....,  நம்ம answer ல satisfy ஆகிட்டான் போல ....)

ஆதவ் : அப்பா Snail  கடிக்காதா ?
(அட பாவி மறுபடியுமா ....)
அப்பா :  கடிக்காதுடா
ஆதவ் :  அதுக்கு பல்லே இல்லையா ?
அப்பா :  ஆமான்டா  பட்டு ..
ஆதவ் :   அது மனுஷங்க கெடயாதா ...
அப்பா :  ஆமாண்டா   (அட ராமா நான் சொன்னதயே  இவன் re-telecast  பண்றானே..)
ஆதவ் :   அதுக்கு பல்லே இல்லையா ??  அது கடிக்காதா ?
அப்பா :  டேய் போதும்டா முடில .. தூங்குடா..

( a  big pause now .   நம்ம பேச்ச கேட்டு தூங்கிட்டான் போல ... நாமலும் தூங்குவோம்டா சாமி... )

ஆதவ் :  அப்பா ... அப்பாாாாாாா ...  ( கண்ணத்த சொறண்டி எழுப்பி ...)
அப்பா :  (கடுப்பாகி போய் ....)  டேய்  என்னடா வேணும் உனக்கு...
ஆதவ் :   அப்பா எனக்கு மொட்டை அடிப்பா ..
அப்பா :  மொட்டையாாாாாா ........        இது எதுக்குடா இப்ப ?
ஆதவ் :   ஸ்ரீநிதி  ( பக்கத்து வீட்டு பொண்ணு ) மொட்டை போட்டு இருக்கால அதே மாதிரி எனக்கும் மொட்டை போடுப்பா நாளைக்கு
அப்பா :  (தூக்க கலக்கத்துல . ) சரி டா ..
ஆதவ் :  நான் மொட்டை போட்டு உனக்கு காட்றேன் ..
அப்பா :  அதான் நல்லா போடறியே இப்போ போதாதா ...
ஆதவ் :  (Suddenly crying .. ) அப்பா மொட்டை போட்டா நான் அழுவேன் ...
அப்பா :   அப்ப ஏன்டா மொட்டை போட சொல்ற .. நீ தான் அழு மூஞ்சி ஆச்சே
ஆதவ் :   ஸ்ரீநிதி ?
அப்பா :  அவ குட் girl  அழ மாட்டா .. நீ bad boy  அழுற ...

(Again  a  pause , this time I got afraid,  என்னமோ புதுசா யோசிக்கிரான்டா ..  என்ன கேட்க போறானோ ?? )

ஆதவ் :   அப்பா ..
அப்பா :   ஐயையோ  என்னடா ?
ஆதவ் :  அப்பா , சாமி ய  நீ அடி ?
அப்பா :  என்னது , சாமிய அடிக்கனுமா ஏன்டா ?
ஆதவ் :  அவர் bad boys a கண்ண குத்துவாரு ....
அப்பா :  இல்லடா , நீ bad boy இல்ல good boy தான் .. சாமி உன் கண்ண குத்தமாட்டாறு , நீ அழாம தூங்குடா ...

ஆதவ் :  crying ....
அப்பா :  தூங்குடா செல்லம் நாளைக்கு ஸ்கூல் போனும் டா .. plzzzz  தூங்குடா ..
ஆதவ் :  அப்பா , நாம மனுஷங்களா ??
அப்பா : ( எனக்கும் அதே doubt  தாண்டா..  )  ஆமான்டா நாம மனுஷங்க தான் ..
ஆதவ் :  Snail மனுஷங்க கெடயாதா ?
அப்பா :   இல்லடா
ஆதவ் :  நாம ??
அப்பா :  நாம மனுஷங்க தான்டா ..
ஆதவ் :  ஸ்ரீநிதி ?
அப்பா :  ஸ்ரீநிதியும் மனுஷங்க தாண்டா
ஆதவ் :  ஸ்ரீநிதி அம்மா ?
அப்பா :  அவங்களும் மனுஷங்க தாண்டா..
ஆதவ் :  அப்பா Despicable me  ல வருவானே அவனும் மனுஷனா ?
அப்பா :  சாமி போதும்டா .. எல்லாரும் மனுசங்க தான்டா , மனுஷங்கனா  கண்ண மூடி தூங்கணும் , நீ மனுஷன் தான ஏன் தூங்க மாட்டேன்குற ?

(Logical a  question கேட்டு மடக்கிட்டோம்டா .. )

ஆதவ்:  அதுக்கு பல்லே இல்லையா ?
அப்பா : இல்லடா
ஆதவ் :  அதுக்கு வேற என்ன இருக்கு ?
அப்பா :  வாய் இருக்கு ?
ஆதவ் :  எனக்கு ?
அப்பா :  உனக்கும் இருக்குடா அத மூடிட்டு தூங்குடா ..
ஆதவ் :  பல்லு ஒடஞ்சு போச்சா ?
அப்பா : அதுக்கு தான் பல்லே இல்லயே எப்டி டா உடையும்
ஆதவ் :  அப்ப எதுக்கு பல்லு இருக்கும் ?
அப்பா :  நாய் ,பூனை ,சிங்கம் இதுக்கு தான் பல்லு இருக்கும்
ஆதவ் : அப்ப நாய் மனுஷங்களா ? ( மனுஷனுக்கு தான் பல்லு இருக்குனு  சொன்னது தப்பா போச்சே )
அப்பா : ஐயோ இல்லடா
ஆதவ் : அப்ப நாய் என்னது ?
அப்பா :  நாய் நாய் தாண்டா .. கண்ண மூடிட்டு தூங்குடா ..
ஆதவ் :  அப்பா Snail  கு கண்ணு இருக்குதா ?
அப்பா  :  இருக்குடா ..
ஆதவ் :   அது கடிக்காதா ??????

(ஐயோ சாமி இதுக்கு மேல என்னால முடியாது .... )

அப்பா :  ஏய் எழுந்துருடி , இவன என்னால பார்த்துக்க முடியாது ,
 Time 1'o clock  ஆச்சு, வேற என்ன வேல வேணும்னாலும் சொல்லு ஆனா இவன மட்டும் பார்த்துக்க சொல்லாத என்னால முடியாது.. நான் வெளில போய் தூங்குறேன்.. நாளைக்கு ஆபீஸ் போகணும் நீயாச்சு உன் புள்ளயாச்சு .. )


Refer to real audio here,   its bit lengthy with many pauses in between.. :)





Edited the pauses here,

No comments:

Post a Comment