Monday, December 23, 2013

The Brand New White BMW Car

Scene 1:

நேரம்: 11:45  AM   இடம் : Office

மச்சி , time ஆச்சு உன் பையன school ல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னியே கிளம்பல ?

(என்னோட Second Reminder  correcta அடிச்சிடுச்சு )

ஐயோ ஆமாண்டா , டைம் ஆச்சு  after  லஞ்ச் பாப்போம் கிளம்புறேன்  bye .


அவசர அவசரமா ஓடி  என் bike சாவி தேடி எடுத்துட்டு கிளம்பும் போது ,
 
   Opposite ல  வந்த நட்பு என்ன பார்த்த உடனே  ,   "மச்சி school ku  தான போற ?   என்ன ஞாபக  படுத்த சொன்னியே 11:45 ku ,  மறந்தே போயிட்டேன் டா ..."

( என்னோட first Reminder இவன் தான்  , என்ன மாதிரியே இருக்கான்  , back up reminder   வெச்சது நல்லதா போச்சு )

 Lift ல ஏறி 4th floor press  பண்றேன், நம்ம போன் கிச்சு கிச்சு மூட்டுச்சு ,  அட நமக்கு எவன் க  call பண்ண போறான் , அது என்னோட third reminder in mobile.

அவசர அவசரமா ஓடி போய் bike start பண்ணா , petrol e இல்ல , அட பாவிகளா இதுக்கு Reminder வைக்க மறந்துட்டேனே,  உடனே நட்புக்கு call போட்டு, "உடனே உன் bike key எடுத்துட்டு parking ஓடி வா,  ஆதவ் ku உன் புது bike காட்றேன்னு சொல்லி இருந்தேன் so உன் bike தான் இன்னைக்கு  "

Scene 2: (ஆதவ் ஸ்கூல்)


என் பையன சமாளிக்க பொய் சொல்லி சொல்லி எல்லாத்துக்கும் அது பழகிடுச்சு ,
ஏமாந்த நட்போட bike எடுத்துட்டு வேகமா school ku போனா already சம late.


 எல்லா பசங்களும் போய்ட்டாங்க, ஆதவ் பரிதாபமா மூஞ்ச வெச்சுட்டு கதவ புடிச்சிட்டு wait பண்ணிட்டு இருந்தான் ,

அப்பா :  ஆதவ் , செல்லம் ரொம்ப நேரம் wait பண்ணிட்டியா ?
ஆதவ் :   அப்பா , ஏன்  late ? நான் அப்பா எங்க அப்பா எங்கனு  தேடுனேன்...

அப்பா :  ஆதவ் , அப்பா உனக்காக இன்னைக்கு புது பைக் எடுத்துட்டு வந்திருக்கேன் டா அதான் late .

(அதே பொய் தாங்க , இவன் கிட்ட petrol  போடலைன்னு சொன்னா அதுக்கு 1000 கேள்வி கேட்பான் )

ஆதவ் அந்த பைக்க பார்த்துட்டு,

ஆதவ் :  ஐ , புது bike  சூப்பரா இருக்கே .. அப்பா எங்க வாங்குன ?
அப்பா :  அப்பா உனக்காக நிறைய சம்பாரிச்சு கடைல வாங்குனேன் டா
    (இந்த point note பண்ணிக்குங்க .. இத இப்ப சொன்னதால தான் பின்னாடி கதைல twist e)

அப்டியே பெருமையா  என்ன ஒரு பார்வை பார்த்தான் ,

ஆதவ் : அப்பா வா fasta போலோம் ( போலாம் தான் ஆதவ் language ல  போலோம் )
ஆதவ் :  நம்ம பைக் என்ன ஆச்சு ?
அப்பா : (correcta  கேட்டுடானே .. )   நம்ம bike அப்பா friend கிட்ட கொடுத்துட்டேன் டா
 (என்ன ஒரு தாராளம் )

அப்புறம் asusual அவனோட சில பல கேள்விகள சமாளிச்சு அவன வீட்ல விட்டுட்டு ஆபீஸ் போறதுக்குள்ள ....   s s s ssbaaa ....  என்னோட previous blog படிச்சவங்களுக்கு புரியும்

அடுத்த ரெண்டு மூணு  நாள் அதே மாதிரி வேற வேற காரணங்களுக்காக வேற வேற bike எடுத்துட்டு போய் ஆதவ் ku  surprise aaa  போட்டு தாக்குனேன் .


Scene 3: (ஆதவ் ஸ்கூல் )


இப்பிடியே  நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கைல , ஒரு நாள் , நம்ம சனி ரொம்ப வெட்டி யா இருந்தார் போல , அழகா எறங்கி வந்து என் நாக்குல settle ஆகிட்டார் . ஏன்னு உங்களுக்கு இப்ப தெரியும் ..

ஆதவ் : அப்பா இன்னைக்கும் புது bike எடுத்துட்டு வந்தியா ?
அப்பா : ஆமாண்டா இன்னைக்கு blue பைக் தெரியுமா........
ஆதவ் : ( திடீர்னு என்ன கோவமா பார்த்து ), அப்பா நீ ஏன் சும்மா சும்மா bike கே எடுத்துட்டு வர ?
அப்பா :  Bike  தான் இருக்கு so  bike  தான் எடுத்துட்டு வர முடியும் , உனக்கு என்ன இதுக்குன்னு BMW  காரா எடுத்துட்டு வர முடியும் ?

(Friends  கிட்ட நக்கலா பேசுற மாதிரி பேசிட்டேன் , ஆனா சனி இங்க தான்  entry ஆனார் ..)

ஆதவ் :  அப்பா , எனக்கு BMW  கார் எடுத்துட்டு வாப்பா , எனக்கு அந்த கார் தான் புடிக்கும் , bike புடிக்காது.

( என்ன சுத்தி இருந்த அத்தன பேரும் at a time ல என்ன பார்த்து , "செத்தொழி" னு chorus aa
சொன்னா மாதிரி இருந்துச்சு )

அப்பா :   ஐயையோ டேய் சும்மா சொன்னேன் டா ,  car வாங்க நிறைய காசு வேணும்டா அப்பா கிட்ட காசே இல்லடா .

(Total surrender ஆகுறத தவிற வேற வழியே தெரியல எனக்கு.. :(   )

ஆதவ் : அன்னைக்கு நீ ஆபீஸ் போய் காசு சம்பாரிச்சு புது பைக் வாங்கி வந்தியே அதே மாதிரி சம்பாரிச்சு வாங்கி வாப்பா ..

(Same  "செத்தொழி" reaction , இந்த வாட்டி நானே சொல்லிகிட்டேன் ...
முன்னாடி ஒரு point note பண்ண சொன்னேன் ல இதுக்கு தான் )

அப்பா :  (பரிதாபமா ..) கார் எல்லாம் வாங்க முடியாது ஆதவ் .. புரிஞ்சிக்க ..

(சேது படத்துல விக்ரம் சொல்லுவான் ல  "மனசு வலிக்குது .. புரிஞ்சிக்க .."  same modulation ல சொல்லி பார்த்தேன் )

ஓ... ஓ.... னு  அழ ஆரம்பிச்சிட்டான்..... என்ன பண்றதுனே தெர்ல ..

பக்கத்துல இன்னொரு குட்டியும்  ஓ.. னு அழுதுட்டு இருந்துச்சு..  அதுக்கு பஞ்சு மிட்டாய் வேணுமாம் ..  இவனுக்கு BMW  கார் வேணும்....

சரி சமாளிப்போம்

அப்பா : ஆதவ் அப்பா உனக்கு புது கார் வாங்கி தரேன் டா நாளைக்கு  .. வா ..

ஆதவ் :   அப்பா .. எனக்கு white கலர் ல பெரிசா புது BMW  கார் வாங்கி தாப்பா ...

இதுல specifications வேறயா ...

அப்பா :   சரி டா .. சூப்பரா ஒரு கார் வாங்கி வரேன் நாளைக்கு .. நீ அழாத..

எப்படியோ ஒரு வழியா சமாளிச்சு அவன வீட்ல விட்டுட்டு , ஆபீஸ் போய்ட்டேன்.


Scene 4: (வீடு )


ஆபீஸ் முடிச்சிட்டு, வீட்டுக்குள்ள enter ஆனா என் பொண்டாட்டி ரொம்ப சந்தோசமா என்ன welcome பண்ணா..  

(இந்த story ஆதவ மையமா வெச்சு இருக்குறதால , என் wife from now on will be referred as 
'அம்மா' )

அம்மா :   என்னங்க நீங்க ஏதோ car வாங்க போறீன்களாம் , சொல்லவே இல்ல ..

என்ன ஆச்சு இவளுக்கு என் இப்ப திடீர்னு நம்மள ஓட்ட ட்ரை பண்றா? அப்படீன்னு யோசிச்சிகிட்டே ,

அப்பா:  யாருடி சொன்னா நான் ஏன்  இப்ப car வாங்கணும் ?

அம்மா:  ஆதவ் தான் சொன்னான் , ஸ்கூல் ல இருந்து வந்ததுல இருந்து நீங்க ஏதோ புது கார் வாங்க போறதா சொல்லிட்டு இருக்கானே ..

அப்பா:  ஐயையோ டேய் நீ இன்னும் இத மறக்கலையா , நான் சும்மா ல சொன்னேன் .

At a time , அம்மா பையன் ரெண்டு பேரும் மூஞ்சும் டொயின் னு போய்டுச்சு ..

அம்மா:  என்ன மட்டும் தான் எமாத்துனீங்க இப்ப புள்ளையும் ஏமாத்த ஆரம்பிச்சிடீங்களா .. பாவம் அவன் வந்ததுல இருந்து கார் கார் னு  சொல்லிட்டு இருக்கான் ...   
சரி இப்ப நாம ஏன் கார் வாங்க கூடாது ?

அப்பா:  ஏன்டி அவன் என்ன கார் தெரியுமா கேட்குறான் ... BMW  கார் தான் வேணுமாம் ..  அவனுக்கு வேற BMW கார் எப்படி இருக்கும்னு தெரியும் , iPad ல கார் game விளையாடி இருக்கான்ல ... இல்லனா கூட எதாச்சும் friend கார் காமிச்சு இதான் BMW கார் னு ஏமாத்திடலாம் .

அம்மா :  அதுவும் ஏமாத்து வேலை தானா .. சரி நம்மால ஏன் அந்த கார் வாங்க முடியாதா என்ன ??

அந்த கேள்வி கேட்ட உடனே அப்படியே, என்ன சுத்தி உலகம் 2-3 secs stop ஆகிடுச்சு ..  
அப்புறம் ஆதவ் அழுற சத்தம் கேட்டு normal ஆகிட்டேன் ..

அம்மா :  என்னங்க சொல்லுங்க , எவ்ளோ இருக்கும்? நாம ஏன் BMW கார் வாங்க கூடாது .

அப்பா :  Right , ஒரு 5 mins இங்கயே இரு, நான் குடு குடு னு  ஓடி போய் , பணக்காரான ஆகிட்டு வந்துடறேன்.    ஏன்டி உன் காமெடிக்கு அளவே இல்லையா...???

அம்மா :  யார் காமெடி பண்றது நீயா நானா, சரி உன் பையன் அழுறான் அவனுக்கு என்ன பதில் சொல்ல போற ?

அப்பா :  ஆதவ் பட்டு , அப்பா தான் உனக்கு நாளைக்கு ஆபீஸ் ல இருந்து வரும் போது கார் வாங்கி வரேன்னு சொன்னேன்ல , அழ கூடாது .. நாளைக்கு நாம கார்ல ஜாலியா போலாம் ...

ஆதவ்:  அப்பா பெரிய White BMW கார் அப்பா ...

ஐயையோ நீ இந்த specifications கூட மறக்கலையா.. ஆண்டவா என்ன மட்டும் காப்பாத்து ..

அப்பா :  சரிடா  கண்டிப்பா வாங்கி வரேன் நீ தூங்கு ...

Night fulla பல ஐடியாக்கள்  யோசிச்சு பார்த்தேன் ஒண்ணுமே விளங்கல ..  :(  
சரி ஆன்டவன் விட்ட வழி ...


Scene 5 (Office):

காலை: 10 A.M 

மச்சி, என்னடா காலங்காத்தால , ebay ல நோண்டிட்டு இருக்க ?

mm , BMW  கார் வாங்கிட்டு இருக்கேன் ..

என்னது நீயா, BMW காரா, அதுவும் ebay லயா ??

ஏன், நாங்கலாம் BMW  கார் வாங்க கூடாதா ?

வாங்க கூடாது , கண்டிப்பா வாங்க கூடாது 

ஏன்டா இப்படி பொசுக்குனு பேசி புட்ட,  சரி விடு ... உண்மையான கார் இல்லடா toy car என் பையனுக்கு, அவனுக்கு இன்னைக்கு புது BMW கார் வாங்கி தரேன்னு சொல்லி இருந்தேன் .. 

(அப்டியே மொத்த முன் கதையும் அவனுக்கு சொன்னேன் ..  )

அட லூசு பயலே அவனுக்கு பொம்மை கார் கொடுத்தா ஒத்துப்பானா??,   அதுவும் ebay ல order பண்ணா அது வர ரெண்டு நாளாச்சும் ஆகுமே , இன்னைக்கு மதியம் அவன ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வரணும்ல அப்ப என்ன பன்னுவ ??

ஐயையோ, ஆமாம்ல இந்த basic matter கூட யோசிக்கலையே டா ,  என்ன பண்றதுனே தெரியாம என்னனமோ பண்ணிட்டு இருக்கேன் ..

இன்னும் 2 hours ல , ஒன்னும் கழட்ட முடியாது , நம்ம client சமாளிக்குற மாதிரி எதையாச்சும் சொல்லி சமாளி ...  All  the Best .

சமாளிப்போம் ...


Scene 6 (ஸ்கூல்):

இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே ஸ்கூல்க்கு வந்துட்டேன் ,  ஆதவ்காக wait பண்ணிட்டு இருந்தேன், அப்படியே "ஆண்டவா அவன் இந்த கார் matter a total aa  மறந்துடணும் " னு வேண்டிக்கிட்டே இருந்தேன் .
என் சின்ன வயசுல ஒரு சைக்கிள் கிடைக்கலைன்னு கூட நான் feel பண்ணது இல்ல.. ஆனா இன்னைக்கு என் பையனுக்காக, இத பண்ண முடியலையேனு serious aa  feel ஆகிட்டேன்..
கஷ்டம் தான் but நமக்காக இல்லைனாலும் அவன் முகத்துல வர அந்த சந்தோசத்துக்காக எப்படியாச்சும் future ல வாங்குறோம் டா .. 

12:00 மணி ஆச்சு...
ஸ்கூல் விட்டாச்சு ....

ஆதவ் class க்கு போனேன், நட்சத்திர மின்மினிகளுக்கு நடுவில் ஆதவன் ஓடி வந்தான் ..

("இந்த நேரத்துல தூய தமிழ் ல இந்த கவிதை எல்லாம் தேவையா", உங்க mind voice  நான் catch பண்டேன்)

அவன அப்படியே அள்ளி அணைச்சு தூக்கிட்டு வெளிய வந்தேன்..

அப்பா :  ஆதவ், இன்னைக்கு ஸ்கூல் ல என்ன நடந்துச்சு ?

அவன divert பண்ண try பண்ணேன், but utter flop 

ஆதவ் :  அப்பா, car  வாங்கி வந்தியா அப்பா ?

இந்த வாட்டி அநியாயத்துக்கு feel ஆகிட்டேன் அவனோட அந்த பாவமான மூஞ்ச பார்த்து.. என்ன சொல்றதுனே தெரியல ..

அப்பா :  வாங்கி வந்துட்டேன்டா , பட்டு ..  உனக்காக அப்பா சம்பாரிச்சு வாங்கி வந்துட்டேன்டா ..

ஏன் மறுபடியும் பொய் சொன்னேன்னு எனக்கே தெரியல ..  but அவன உடனே disappoint பண்ண முடியல ..

ஆதவ் :  எங்க அப்பா கார் காணும் ?

சரி , எவளவோ சமாளிச்சிட்டோம் ... இதையும் சமாளிப்போம் ...

அப்பா :  அதோ பாருடா நம்ம கார் ....

நான் சொன்ன இடத்துல, பல நாள் service பார்க்காத என்னோட பழைய bike பல்ல இளிச்சுட்டு பப்பரப்பனு நின்னுட்டு இருந்துச்சு ...

All over .. இப்ப ஓ ..னு அழ போறான் , எப்படி இவன சமாளிக்கிறதுனு ... யோசிச்சிகிட்டே இருந்தேன்..

ஆதவ் அந்த மொக்க bike a உத்து பார்த்துட்டே இருந்தான் ..  என்ன யோசிக்கிறானே தெரியலையே ..
அப்புறம் என்ன பார்த்து ,

ஆதவ் :  ஐ , சூப்பரா இருக்கே அப்பா ..  புது white BMW கார் ..   சம்பாரிச்சு வாங்கிட்டியா அப்பா ...

சொல்லிகிட்டே என்னோட tvs wego வண்டி முன்னாடி ஏறி நின்னுட்டு , வாப்பா சொய்னு faaaasta ஓட்டலாம் ... 

அவன் முகத்துல அவ்ளோ சந்தோஷம் , உண்மையிலேயே புது BMW  கார் ஓட்டுற மாதிரி .. பைக் handle bar புடிச்சிகிட்டு car ஓட்டிகிட்டு இருந்தான்.




ஆதவ் :   அப்பா நாளைக்கு red color BMW கார் வாங்கி வரியா ???

அப்பா :  கண்டிப்பாடா செல்லம் , உனக்கு இல்லாததா ... நாளைக்கு கார் வேணாம் ஆதவ்,  bore  அடிக்கும்..  அப்பா உனக்கு flight வாங்கிட்டு வரேண்டா பெரிய ... flight ..

ஆதவ் :  ஐ .. ஜாலி ...... 



புத்தர், jesus , கீதை , அப்புறம் நம்ம facebook மகான்கள்  எல்லாம் பல முறை சொல்லி புரியாதது இப்ப தான் புரிஞ்சது ..

சந்தோசமா இருக்குறதுக்கு "Brand new BMW Car ", எல்லாம் தேவையே இல்ல, ஒரு ஓட்டை சைக்கிள் கூட போதும் ...
Happiness is only the state of mind!!!
Stay Childish!! Stay Foolish!! 
See you..



Like it?   Encourage my writing by a simple like here,

No comments:

Post a Comment