Saturday, December 28, 2013

உனக்கு அப்பா புடிக்குமா அம்மா புடிக்குமா ?

அப்பா :  ஆதவ் உனக்கு அப்பா புடிக்குமா இல்ல அம்மா புடிக்குமா ?

ஆதவ் :  எனக்கு அப்பா புடிக்கும்...  அம்மா புடிக்கும்..
   ( கைல ஒரு ஒரு விரலா எண்ணி ...)  பாட்டி புடிக்கும் , தாத்தா புடிக்கும் , மாமா புடிக்கும் , மாமி புடிக்கும்..
  (அப்புறம் ரெண்டு கைல ஒரு பெரிய வட்டம் போடற மாதிரி காமிச்சு .. ) அப்புறம் எல்லாரையும் புடிக்கும் .

(இனிமேல் இந்த மாதிரி மொக்கை கேள்வி கேட்காதடானு symbolic a சொல்றான் .. )

(But நாம சும்மா விட்ருவோமா, இப்ப எப்படி மடக்குறேன் பாரு ..)

அப்பா :   ஆதவ் உனக்கு அப்பாவ எவ்ளோடா புடிக்கும் ...???

ஆதவ் :     நீ one தான் இருக்கல, அலால (அதனால ) one தான் புடிக்கும் .. அம்மா one தான் இருக்காங்க , பாட்டி one தான் இருக்காங்க , தாத்தா one தான் இருக்காரு ,  அலால எல்லாரையும் one one தான் புடிக்கும்.

அப்பா:  !!!!!!!!!!!!!!!!???????? 




No comments:

Post a Comment